FAQ : நுகர்வோர்

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு HAC அமைப்பிற்குள்ள அதிகாரம் என்ன? அந்த அதிகாரத்தை HAC அமைப்பிற்கு வழங்கியது யார்?

HAC அமைப்பு 'நிறுவனங்கள் சட்டமூலத்தின்' கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் HAC அமைப்பின் குறிக்கோள் ஹலால் சான்றிதழ்களை வழங்குவது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ஹலால் சான்றிதழை பெற எவ்வளவு பணம் செலவாகும்?

ஹலால் சான்றிதழுக்கான செலவு தொழிற்சாலை, நிறுவனத்தின் அளவு மற்றும் தூரம், வியாபாரத்தின் சுபாவம் போன்ற பல காரணிகள் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படும்.

பல பற்பசை வகைகளில் 'பென்சில் அல்கஹோல்' என்ற ஒரு சேர்மானம் இருக்கின்றது. இது ஹலாலா? ஹராமா?

பென்சில் அல்கஹோல் ஹலாலான ஒரு பொருள். இது இயற்கையாக தாவர வகைகளிலிருந்து பெறப்படுகிறது. இது கனி வகைகளிலும் தேயிலையுலும் கூட உள்ளது.  பெயரளவில் இது பென்சில் அல்கஹோல் என்று குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் இது மதுசார வகை அல்ல மாறாக அழகு சாதனப் பொருட்களின் கலவையின் பக்டிரீயாக்களை கொள்வதற்கு பயன்படுத்தப்படும். 

பொதியில் குறிப்பிட்டுள்ள E எண்ணைப் பார்த்து ஒரு உற்பத்தி ஹலாலா என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?

பொதுவாக உணவுப் பொருட்கள் பல பதார்த்தங்கள் மற்றும் சேர்மானங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றுல் உணவு சேர்மாணங்களும் (Food Additives) உள்ளடங்கும், இவற்றையே E எண்கள் என குறிப்பிடப்படுகின்றன. இவை மிருகம், தாவரம், நுன்னங்கி, இரசாயனம் மற்றும் கணியம் போன்றவைகளிலிருந்து பெறப்படுகின்றன. E எண்ணை பார்த்து ஒரு உற்பத்தியின் ஹலால் ஹராம் பற்றி அறிவது சிரமமான காரியம். சில வேளை ஒரு உணவு சேர்மாணம் தாவரம் அல்லது மிருகத்திலிருந்தும் பெறப்பட முடியும். எனவே உணவு சேர்மாணங்களின் விபரத்தை சரியாக அறிந்து கொள்வதற்கு துல்லியமான ஆய்வு தேவைப்படுகின்றது. எனவே ஹலால் சான்றிதழ் வழங்கும் ஒரு அமைப்பின் சேவையை இதற்காக பயன்படுத்திக்கொள்வதே சிறந்த முறையாகும்.

கிளிசரிட் என்றால் என்ன?

மொனோ மற்றும் டய்-க்ளிரசிட் என்பன எமல்சிஃபயர்களாக பாவிக்கப்படும் கொழுப்பு வகைகளாகும். ஒரு உணவு உற்பத்தியில் உள்ள எண்ணெய் அல்லது கொழுப்பு மற்றும் நீர் வேறாகாமல் இருப்பதற்கு எமல்சிஃபயர் சேர்க்கப்படும்.

மொனோ மற்றும் டய்-க்ளிரசிட் என்ற பதார்த்தம் தாவரங்களில் இருந்தும் மிருகங்களில் இருந்தும் பெறப்பட முடியும். தாவரங்களில் இருந்து அல்லது ஹலாலாக அறுக்கப்பட்ட ஹலாலான கால்நடைகளில் இருந்து பெறப்பட்டதாக இருப்பின் அது ஹலாலாகும். மாற்றமாக பன்றி போன்ற ஹராமான மிருகங்களில் இருந்தோ அல்லது ஹராமான விதத்தல் அறுக்கப்பட்ட கால்நடைகளில் இருந்தோ பெறப்பட்டிருப்பின் அது ஹராமாகும்.

மொனோ மற்றும் டய்-க்ளிரசிட் என்ற பதார்த்தம் மாஜரின், பீனட் பட்டர் போன்ற பல உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.

HAC ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள ஐஸ் கிறீம் வகைகள் என்ன?

•    காமெல்லோ
•    எலிஃபன்ட் ஹவுஸ்
•    கொத்மலே
•    கார்கில்ஸ் மெஜிக்

கொசினில் (E 120) என்றால் எனன?

கொசினியல் எனப்படுவது ஒரு வகை பூச்சியில் இருந்து எடுக்கப்படும் உணவு நிறமூட்டியாகும். இப்பூச்சியிலிருந்து சிகப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற நிறங்கள் எடுக்கப்படுகின்றன. காமினிக் என்ற இரசாயனம் கொசினியல் பூச்சியில் சுமார் 19-22 சத வீதம் இருப்பதுடன அப்பூச்சிகளை கொதிக்கும் நீரில் இட்டு அதன் பின் வெய்யில், நீராவி அல்லது உலையில் வைத்து உலர்த்தப்படும். உலர வைக்கும் முறைகளைப் பொறுத்து வௌ;வேறு விதமான நிறங்கள் கிடைக்கின்றன. பூச்சிகளின் உடல் எடையில் 30 சத வீதம் கிடைக்கும் விதத்தில் அவை உலர்த்தப்படும். கொசினில் டை ஒரு கிலோ கிரேம் உற்பத்தி செய்வதற்கு சுமார் ஒரு இலட்சம் பூச்சிகளை கொள்ள வேண்டும்.

HAC ஒரு இலாப நோக்குள்ள நிறுவனமா?

HAC அமைப்பு இலாப நோக்கமற்றதாகும். ஈட்டப்படும் இலாபத்தை ஹலால் சான்றிதழ் முறைமையை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களில் செலவு செய்யப்படும். மேலதிக நிதி இருப்பின் தேசிய நலனை இலக்காக கொண்ட பொதுப்பணிகளுக்கு வழங்கப்படும்.

வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ் ஒன்று இரத்தாவது ஏன்?

இரு சாராருடைய பரஸ்பர உடன்பாடு அடிப்படையில் அல்லது சான்றிதழ்தாரர் நிபந்தனைகளை மீறுவதால் ஹலால் சான்றிதழ் இரத்தாகும்.

Pages