E-எண்கள் என்பது ஐரோப்பாவில் நடைமுறையில் உள்ள உணவு சேர்க்கைகளுக்கு இலக்கம் மூலம் அடையாளமிடும் ஒரு முறைமையாகும். தற்பொழுது இது சர்வதேச ரீதியில் INS எனவும் அழைக்கப்படுகின்றது. இருப்பினும், இது உணவு சேர்க்கைகைளின் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமை அல்ல. ஓரே E இலக்கம் கொணட பல பதார்த்தங்கள் ஹலால் மூலம் பொருட்களில் இருந்தும், ஹராம் மூலப் பொருட்களிலிருந்தும் தயாரிக்க முடியும். எனவே இந்த முறைமையை வைத்து ஒரு உணவு உற்பத்தி ஹலாலா இல்லையா என்பதை கண்டுபிடிப்பது எளிதான காரியமல்ல. ஆகையால், இவைகளை பயன் படுத்தி உணவு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் போது இவை தொடர்பாக மிக தீவிரமான ஆராய்வுகளை மேற்கொள்வது அவசியமாகின்றது.
E-எண் வகைப்படுத்தல்கள் சில கீழே தரப்பட்டுள்ளன:
- E 100 – E 199 (கலர்ஸ்)
- E 200 – E 299 (பிரிசவேடிவ்ஸ்)
- E 300 – E 399 (என்டிஒக்சிகடன்ட்ஸ், எசிடிடீ ரெகூலேடர்ஸ்)
- E 400 – E 499 (திக்னர்ஸ், இஸ்டபிலைசர்ஸ், இமல்ஸிபயர்ஸ்)
- E 500 – E 599 (எசிடிடீ ரெகூலேடர்ஸ், என்டி-கேகிங் ஏஐன்ட்ஸ்)
- E 600 – E 699 (ப்லேவர் என்ஹான்ஸர்ஸ்)
- E 900 – E 999 (சர்பஸ் கோடிங் ஏஐன்ட்ஸ், கேஸஸ், ஸ்வீடனர்ஸ்)
- E 1000 – E 1999 (எடிஷனல் கெமிகல்ஸ்)