FAQ

'ஹலால் உணவு' மற்றும் 'ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள உணவு' இடையே உள்ள வேறுபாடு என்ன?

'ஹலால்' என்பது 'அனுமதியுள்ள' என்ற கருத்துள்ள ஒரு அரபிமொழிச் சொல்லாகும். ஹலாலான உணவு வகைகளை மட்டுமே முஸ்லிம்கள் உட்கொள்ளலாம். பழ மற்றும் மரக்கறி வகைகள், மீன் போன்ற கடலுணவுகள் இயற்கையாகவே ஹலாலான உணவு வகைகள் ஆகும். அத்துடன் ஹலாலான விதத்தில் அறுக்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகை போன்ற கால்நடைகளும் ஹலாலாகும். ஹலான முறையில் அறுக்கப்பட்ட மேற்படி பிரானிகளில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்களும் ஹலாலாகும். 'ஹலால் சான்றிதழ் பெற்ற உணவு' என்பது ஹலால் சான்றிதழ் வழங்கும் ஒரு அமைப்பினால் 'ஹலால்' என உறுதி செய்யப்பட்ட உணவாகும். ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையில் பரிசோதனை, கண்காணிப்பு உட்பட்ட பல விடயங்கள் உட்படும். ஹலால் சான்றிதழ் பெற்ற அனைத்து உற்பத்திகளும் ஹலால் ஆகும் என்பதோடு சந்தையில் விற்பனைக்குள்ள அனைத்து ஹலால் உணவுகளும் ஹலால் சான்றிதழ் பெற்றவை அல்ல.

HAC குறுந்தகவல் சேவையை எப்படிப் பெறுவது?

இச்சேவையைப் பெற REG HAC என டையிப் செய்து 77100 என்ற இலக்கத்தற்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி வைக்கவும். அது உறுதி செய்யப்பட்டவுடன் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள உற்பத்திகள் பற்றிய தகவல் உங்களுக்கு; கிடைக்கும். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: HAC SMS & USSD

இலங்கையில் குளிர் பாணங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளனவா?

இது வரை குளிர்பாணங்களுக்காக ஹலால் சான்றிதழ் கோரப்படவில்லை.

தயிர் நீர் ஹலாலா?

தயிர் நீர் (whey) சீஸ் உறபத்தி செய்யும் போது கிடைக்கும் ஒரு மேலதிகப் பொருளாகும். சீஸ் உற்பத்திக்காக பயன் படுத்தப்படும் என்சயிம்கள், நுன்னுயிர்கள் / தரவங்கள் அல்லது ஹலாலாக அறுக்கப்பட்ட ஹலாலான பிரானிகளின் மூலங்களில் இருந்து பெறப்பட்டிருப்பின் அந்த தயிர் நீர் ஹலாலாகும்.

E இலக்கங்கள் பயன் படுத்தப்படுவது விலங்குகங்களில் பெறப்படும் மூலப்பொருட்களுக்கு மட்டுமா?

இல்லை, சில நு இலக்கங்கள் பிரானிகளிடமிருந்து பெறப்படுபவைகளுக்கே அவ்விலக்கங்கள் தரப்படுகின்றன. கிழே சில உள்ளன:

E 120 கொசினில் - கொசினில் பூச்சியில் இருந்து பெறப்படும் ஒரு வகை நிறமூட்டி

E 441 ஜெலடின் - கால்நடைகள், பன்றி போன்ற விலங்குகளின் தோல் மற்றும் எலும்புகளிலிருந்து பெறப்படும்

E 542 எடிபல் போன் பொஸ்பேட் - மிருக எலும்புகளிலிருந்து பெறப்படும்

E 471 போன்ற பொதுவான இலக்க அடையாளங்கள் உள்ள உணவு சேர்மானங்கள், தாவரங்கள் மற்றும் மிருகங்களிடமிருந்தும் பெறப்படும்.

ஜெலடின் ஹலாலா?

ஜெலடின, கால்நடைகள், பன்றி மற்றும் மீன் போன்ற பிராணிகளின் தோல் மற்றும் எலும்புகளிலிருந்து பெறப்படும் ஒரு புரதமாகும். ஜெலடின் பேகரி உணவுகள், ஐஸ் க்றீம், யோகட், ஜெலி போன்ற பொருட்கள் தயாரிப்பில் சேர்க்கப்படுகின்றது. பொதியில் 'ஜெலடின்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பின் அது ஹலால் ஹலால் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என பார்த்து வாங்குவதே சாலச்சிறந்தது. ஹலாலான மூலங்களில் இருந்தும் பெறப்பட்ட 'ஹலால் ஜெலடின்' தற்போது சந்தையில் இருக்கின்றன.

லெசிதின் ஹலாலா?

எமல்சிஃபயர் வகையான இது சோயா அவரை, முட்டையின் மஞ்சள் மற்றும் மிருக மூலங்களில் இருந்தும் பெறப்படும். ஒரு உணவு உற்பத்தியில் உள்ள எண்ணெய் மற்றும் நீர் வேறாகாமல் இருப்பதற்கே எமல்சிஃபயர் சேர்க்கப்படும். இது பெறப்படுவது தாவரங்கள் அல்லது முட்டையில் இருந்தோ அல்லது ஹலாலாக அறுக்கப்பட்ட ஹலாலான மிருகங்களில் இருந்தோ என்றால் மட்டும் ஹலாலாகும்.

ஹலால் சான்றிதழ்கள் பெற்றுள்ள உற்பத்திகள் பற்றிய புதிய தகவல்களை நான் எங்கிருந்து பெறலாம்?

இதற்காக HAC இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும். அல்லது இங்கு கிளிக் செய்வதன் மூலம் இது தொடர்புடைய PDF பக்கத்தை பதிவிரக்கம் செய்க.

Pages