எம்மைப் பற்றி

ஹலால் சான்றுறுதிப் பேரவை HAC என்பது ஹலால் சான்றிதழ் வழங்கும் மற்றும் சர்வதேசரீதியில் அங்கீகாரம் பெற்ற கண்காணிப்பு முறையையும் செயல்படுத்தும் ஓரே  நிறுவனமாகும். 2007ஆம் ஆண்டு இலக்கம் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான HAC, சர்வதேச தரத்திலான ஹலால் சான்றிதழ்களை வழங்கும் ஒரே நோக்குடன் துறைசார் நிபுணர்கள் பலரின் வழிகாட்டலிலும் அவர்களுடைய நேரடி பங்களிப்பிலும் ஸ்தாபிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது.

HAC அமைப்பின் இச்சேவை காரணமாக இலங்கை உற்பத்தி நிறுவனங்கள், குறிப்பாக ஏற்றுமதியை குறிக்கோளாகக் கெண்டு இயங்கி வரும் நிறுவனங்கள், துரித வளர்ச்சி அடைந்து வரும் உலகளாவிய ஹலால் சந்தைக்கு அணுகுதலை பெறும் வாய்ப்பைப் பெற்று வருகின்றன. உலக ஹலால் சந்தையானது 200 கோடி வாடிக்கையாளர்களுக்கு 2 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் பெருமதியான பொருட்களை வருடாந்தம் விற்பனண செய்து வரும் ஒரு மிகப்பிரம்மாண்டமான சந்தையாகும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய ஓன்றாகும்.

ஹலால் தரங்கள் எனப்படுவது சில மார்க்க வழி காட்டல்கள் மீது அமைக்கப்பட்ட ஒரு உயரிய கோட்பாடொன்றாவதுடன் இதன் அடிப்படை சுத்தம், சுகாதாரம், தரம், பாதுகாப்பு போன்ற நுகர்வோர் நலன் கருதும் இன்றியமையா முக்கிய அம்சங்களேயாகும். இதன் மூலம் இன, மத, கலாசார வேறுபாடின்றி பொருட்களை வாங்கும் நுகர்வோர் அனைவரும் நன்மை அடைந்து வருகின்றனர்.

தமது சேவையை உள்ளூர் வெளியூர் நுகர்வோரின் நம்பிக்கையை பெற்ற வண்ணம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறும் விதத்தில் உயர்தரத்தில் வழங்குவதற்காகவும், தமது உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகளில் ஹலால் தரங்களை பேண சுயமாக முன்வரும் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்காகவும், இலங்கை வாழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முன்னணி மார்க்க அறிஞர்கள், துறைசார் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் உணவுப் பகுப்பாய்வுத்துறை நிபுணர்களின் பங்களிப்பை இவ்வமைப்பு பெற்று வருகின்றது.

ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டில் அறிஞர்கள் மற்றும்  விற்பன்னா்களுடைய சேவையை பெறும் அவசியம் இருப்பதால் இச்சேவைக்காக கட்டணம் அறவிடப்படுகின்றது. இருப்பினும், கட்டணமாகப் பெறும் தொகைகளின் பெரும் பகுதியை தமது சேவையை மேலும் மேம்படுத்துவதற்காகவே HAC செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட, தேசிய நலனை நோக்கமாக கொண்ட சில நற்பணிகளுக்கும் இவ்வருவாய் செலவிடப்படுகின்றது.

மேலே குறிப்பிட்ட பாரிய சர்வதேச ஹலால் சந்தைக்கு நமது ஏற்றுமதி நிறுவனங்களும் அனுகுதலை பெறுவதற்கு துணை செய்வதன் மூலம் யுத்தத்திற்குப் பின்பான, பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டுள்ள, இக்காலகட்டத்தில் தனது பணி நம் நாட்டிட்கு பெரும் பயனை ஈட்டித்தரும் என HAC நம்புகின்றது. அத்துடன், ஹலால் கோட்பாடு பற்றிய புறிந்துணர்வை சகலர் மத்தியிலும் ஏற்படுத்துவதோடு, உணவு மற்றும் ஏனைய நுகர்வுப் பொருட்கள் தொடர்பாக சமய மற்றும் சுகாதார கோணங்களில் தமக்கு விருப்பமான தீர்மாணங்களை சுயாதீனமாக எடுக்கும் ஜனநாயக உரிமை உறுதி செய்வதும் HAC அமைப்பின் இப்பணியின் மற்றுமொரு குறிக்கோளாகும்.