ஹலால் சின்னங்கள்

HAC ஹலால் சின்னம் பற்றிய அறிமுகம்

இலங்கை தேசிய அறிவுசார் சொத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 3 விதமான HAC ஹலால் சின்னங்களின் சட்டபூர்வ உரிமையாளராக HAC இருக்கின்து. அச்சின்னங்கள் கீழே தரப்பட்டுள்ளன:

 

       சின்னம் 1                                  சின்னம் 2                                                      சின்னம் 3

சின்னம் 1 மற்றும் 2

சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள உற்பத்திகளுக்கு, குறிப்பாக ஒரு வருடகாலத்திற்கு, செல்லுபடியாகும் வகையில் ஹலால் இணக்கப்பாட்டு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள உற்பத்திகளுக்கு சின்னம் 1 மற்றும் 2 ஐ பயன் படுத்துவதற்கு HAC அனுமதி வழங்குகின்றது. HAC இணங்கும் பட்சத்தில் ஒரு வருடகாலம் முடிவுற்றதன் பின்பு இச்சான்றிதழை புதுப்பிக்கலாம்.

சின்னம் 3

சின்னம் 3 ஐ பயன் படுத்துவதற்கு அனுமதியோ அதிகாரமோ HAC வழங்க மாட்டாது.

HAC யின் ஹலால் சின்னத்தின் பயனாளி

HAC யின் ஹலால் சின்னங்களாவன, அச்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களை வாங்கும் மற்றும் பயன் படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஹலால் தொடர்பாக (அங்கீகாரத்தை தரும் ஒரு சான்றிதழ்படுத்தல் அடையாளமாகும்.) குறிப்பிட்ட அத்தயாரிப்புகள் HAC ஹலால் சான்றிதழ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள தரங்களுக்கு அமைய இருப்பதை இது  உறுதிசெய்கிறது. 

மேலே குறிப்பிட்ட சின்னங்களின் சட்ட ரீதியான உரிமையாளர் என்ற அடிப்படையில், HAC ஹலால் சான்றிதழின் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட செல்லுபடியுள்ள ஹலால் சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அச்சின்னங்களை பயன் படுத்த HAC அனுமதி வழங்கும். 

 

HAC ஹலால் சின்னத்தின் செயற்பாடுகள்

ஓர் உற்பத்திப்பொருளில் உள்ள HAC ஹலால் சின்னமாகிரது கீழ்காணப்படும் விடயங்களை மேற்கொள்ளும்:

ய.  அது HAC மூலம் சான்றிதழ் வழங்கி உறுதி செய்யப்பட்ட ஒரு உற்பத்திப் பொருள் என்பதை இனங்காட்டும்.

டி.  ஏனைய உற்பத்திகளில் இருந்து இவ்வுற்பத்தியை வேறுபடுத்திக் காட்டும் வசதியை உற்பத்தியாளருக்கு வழங்கும்.

உ.  ஹலால் விழிப்புணர்வுள்ள வாடிக்கையார்களை அணுகும்.

ன.  ஹலால் விழிப்புணர்வுள்ளவர்களுக்கு தெரிவு செய்வதை எளிதாக்கும்.

 

HAC ஹலால் சின்னத்தைப் பயன் படுத்துவதற்கான சட்ட திட்டங்களும் நிபந்தனைகளும்

 1. HAC ஹலால் சின்னங்களைச் சார்ந்த அறிவுசார் சொத்து சட்டம் தொடர்பான உரிமைகளினது ஏக போக உரிமையாளர் HAC மட்டுமே.
 2. HAC ஹலால் சான்றிதழ் பெற்றுள்ள ஒருவர் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு மாற்றமாக நடக்கும் பட்சத்திலோ அல்லது அறிவுசார் சொத்து சட்டத்திற்கு மாற்றமாக நடக்கும் பட்சத்திலோ அதற்கு எதிராக HAC தக்க நடவடிக்கை எடுக்கும். HAC ஹலால் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து அனுகூலங்களும் HAC யையே சார வேண்டும்.
 3. HAC ஹலால் சின்னங்களை பயன் படுத்துவதை, உற்பத்தியாளருக்கு HAC அனுசரணை வழங்குவதாகவோ, உற்பத்தியாளருடன் கூட்டிணைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவோ வரைவிளக்கணம் செய்தல் கூடாது.
 4. தெரிவிக்கப்பட்ட, உணர்த்தப்பட்ட எந்த வகையான உத்தரவாதமும் அளிக்கப்படாமலும், வரையறையின்மை உட்படுத்தப்பட்டும், அத்துமீறாமைக்கான உத்தரவாதங்கள் இன்றியுமே HAC சின்னங்களை பயன் படுத்த அனுமதி வழங்கப்படுவதோடு, சின்னங்களை பயன் படுத்துவது தொடர்பாக விபரீதங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்களை இருக்குமாயின் முழுபொருப்பையும் தயாரிப்பாளர் அல்லது உரிமையாளரே ஏற்க வேண்டும்.
 5. குறுந்தகடில் (CD) தரப்படும் மூல HAC ஹலால் சின்னங்களின் படங்களைத் தவிர வேறு எந்த மூலத்தில் இருந்தும் எடுக்கப்படும் ஹலால் சின்னங்களை ஹலால் சான்றிதழ்தாரர் பயன் படுத்தக் கூடாது.
 6. HAC ஹலால் சின்னங்களை கறுப்பு வெள்ளையில் அல்லது வர்ணத்தில் மீள்நிர்மாணம் செய்வதாயின் அதற்காக HAC யின் எழுத்து மூல அனுமதியைப் பெற வேண்டும்.
 7. HAC ஹலால் சின்னங்களின் அளவு, நிறம் போன்ற விபரங்கள் HAC ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் எழுத்து மூலம் கோரும் பட்சத்தில் கொடுக்கப்படும்.
 8. கீழ்காணும் நிபந்தனைகளுக்கு அமைய HAC ஹலால் சின்னங்களை பயன் படுத்துவதற்கான அனுமதியை உற்பத்தியாளருக்கு HAC வழங்குகின்றது:குறிப்பிட்ட தயாரிப்பு HAC ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட ஹலால் உற்பத்தி என்பதை நுகர்வோருக்கு தெரிவிப்பதற்கே ஹலால் சின்னம் பயன் படுத்தப்படும்.
 • HAC ஹலால் சின்னமானது HAC ஹலால் சான்றிதழ் செல்லுபடியாக இருக்கும் காலக்கெடுவில் தயாரிக்கப்பட்ட உற்பத்தியின் பொதி மீது தென்படும் விதத்தில் அச்சிடப்படுதல் வேண்டும்;.
 • HAC ஹலால் சின்னம் தனியாகவும் தெளிவாகவும் தென்படும் விதத்தில் இருக்க வேண்டுமே தவிர அது ஏனைய கிறெஃபிக் வடிவங்களுடன் பின்னப்பட்டதாக இருத்தல் கூடாத.
 • இயல்பிலோ, தோற்றத்திலோ HAC ஹலால் சின்னத்தின் அளவு, உயர மற்றும் அகல வீதம், எழுத்து வடிவம், வடிவமைப்பு, ஒழுங்கமைப்பு. வர்ணங்கள் என்ற எதனையும் எவ்வகையிலும் மாற்றவோ, அசைவூட்டவோ, சிதைக்கவோ கூடாது.
 • உற்பத்தியின் வர்த்தக நாமம் அல்லது உற்பத்தியாளரின் பெயரை விட விஞ்சியதாக HAC ஹலால் சின்னம் இருக்கக்கூடாது.
 • நேர்மறை உட்கருத்துடனேயே அன்றி HAC ஹலால் சின்னம் காட்சிப்படுத்தப்படக் கூடாது என்பதுடன் HAC ஹலால் சின்னத்தின் பெயருக்கோ, மணச்சித்திரத்திற்கோ தீங்கு, இழிவு அல்லது பாதகம் ஏற்படும் விதத்தில் சின்னத்தை காட்சிப்படுத்தக் கூடாது.
 • HAC யினால் மறுப்புத் தெரிவிக்க நேரும் விதங்களில் அதாவது, தூஷனமான, ஆபாசமான, வன்முறையை கற்பிக்கும், சகிக்க முடியாத, இரசிக்க முடியாத, அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய மற்றும் பாலுணர்வை தூண்டக் கூடியவை பக்கத்தில் HAC ஹலால் சின்னதை காட்சிப்படுத்தக் கூடாது.
 • HAC ஹலால் சின்னம், குறிப்பிட்ட உற்பத்தி ஹலால் என்பதனை மட்டும் உறுதி செய்வதாக இருத்தல் வேண்டுமே தவிரஅவ்வுற்பத்தியை மேம்படுத்துவது, வழிமொழிவது, அதற்கு அனுசரணை வழங்குவது, சிபாரிசு செய்வது அல்லது அதனுடன் கூட்டிணைந்துள்ளது போன்ற அர்த்தத்தை தரும் விதத்தில் அல்லது அந்த எண்ணத்தை தோற்றுவிக்கும்; விதத்தில் HAC ஹலால் சின்னத்தை அமைத்தல் கூடாது.
 • HAC ஹலால் சின்னத்தை எவ்வகையிலும் சிறுமைப் படுத்தும் விதத்திலோ, அதன் அறிவுசார் சொத்து உரிமை மற்றும் ஏனைய உரிமைகளை மீறும் விதத்திலோ, எந்தவொரு உள்நாட்டு சர்வதேச சட்டத்தை மீறும் விதத்திலோ அல்லது HAC யின் கீர்த்திக்கு சேதம் ஏற்படும் அல்லது அது மங்கிப் போகும் விதத்திலோ HAC ஹலால் சின்னத்தை பயன் படுத்துதல் கூடாது.