நிறுவன கட்டமைப்பு

2007ஆம் ஆண்டு இலக்கம் 7 சட்டத்தின் கீழ் உத்தரவாதம் மூலம் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனமாக ஸ்தாபிக்ப்பட்ட HAC, ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும். சர்வதேச ரீதியில் ஏற்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் சமகால நிறுவன நிர்வாகக் கோட்பாடுகள் அடிப்படையில் செயற்படும் நிர்வாகச் செயற்பாடொன்றின் வெளிப்பாடான சேவைகளை வழங்குவது HAC அமைப்பின் நோக்கமாகும். தொடர்ச்சியான மற்றும் நீடித்த விதத்தில் வர்த்தக செயற்பாடுகள்  நடைபெறுவதை உறுதி செய்வதில் அக்கறை கொண்டுள்ள HAC, தனது சகல செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் போன்ற உயரிய நிர்வாக நியதிகளைப் பேணும் பொருட்டு மூன்றாம் சாரார் கணக்காய்வு மற்றும் உள்ளகக் கணக்காய்வு உட்பட, சிறப்பான துறைசார் கணக்காய்வு முறைமைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

  HAC அமைவு

  • உத்தரவாதம் மூலம் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பாக 11 நிறுவிய அங்கத்தவர்களால் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.
  • இலாப நோக்கமின்றி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • 40 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • தற்சமயம் நாட்டின் பல பாகங்களில் உள்ள 230 நிறுவனங்களின் ஹலால் சான்றிதழ் தொடர்பான ஆராய்வு, பரிசோதனை, சான்றிதழ் வழங்கள், தொடர்கண்காணிப்பு உட்பட்ட கருமங்களை மேற்கொண்டு வருகின்றது.
  • எமது சான்றிதழ் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், உலகின் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
  • இலங்கையில் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அதிகமானவை HAC சான்றிதழ்களை பெற்று வருகின்றன.