தொழில் அபிவிருத்தி

உலகளாவிய ரீதியில் ஹலால் உற்பத்திகளை கோரும் நுகர்வோர், உற்பத்தியாளர்கள் மற்றும் அரசாங்கங்களின் ஹலால் சந்தை 160 கோடியை தற்போது தாண்டியுள்ளதோடு இது உலக மொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 25% என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா, நிதி உட்பட பல துறைகளைச் சார்ந்த மற்றும் அன்றாட உணவு, பானம், மருந்து, அழகுசாதனப் பொருட்கள் உட்பட பல உற்பத்திகள் ஹலால் சந்தையில் தற்போது விற்பனையாகி வருகின்றன.